பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க எடுத்த முடிவு சட்டபூர்வமானது அல்ல என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை எனவும், அது மக்கள் விரும்பும் தீர்வு அல்ல எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் கட்சிகளின் எந்தவொரு தலைவராலும் முழுமையான மாற்றத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை அவரது நியமனம் நடைமுறைக்கு எதிரானது மற்றும் அரசியலமைப்புக்கு முரணானது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவர்கள் இதனை கூறியுள்ளனர்.

மேலும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஓமல்பே சோபித தேரர் கேட்டுக்கொண்டார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap