2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் உலகளாவிய உணவு நெருக்கடி இலங்கையையும் பாதிக்கும் என உலக வங்கி எச்சரித்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் உறவுகளை மீள ஏற்படுத்த வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கையுடன் முரண்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்துவது இன்றியமையாதது என கூறியுள்ளார்.

இந்தோனேசியா போன்ற நாடுகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் வங்கித் துறை வீழ்ச்சியால் பொருளாதாரச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டன.

எனவே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு இங்குள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவுடனும் ஆக்கபூர்வமான உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap