நாடாளுமன்றில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகள் பெற்று பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பகீர் மார்க்கர் 65 வாக்குகளை பெற்றார்.
அத்தோடு குறித்த இரகசிய வாக்கெடுப்பில் 3 செல்லுபடியற்ற வாக்குகளும் செலுத்தப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.