ரம்புக்கனை போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அதில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு கேகாலை நீதவான் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான வழக்கு புதன்கிழமை (27) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கேகாலை நீதவான் வாசன நவரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களுக்கு விதி அதிகரிப்பு ஆகியவற்றிற்கு எதிராக ரம்புக்கனையில் போராட்டம் இடம்பெற்றது.
19 ஆம் திகதி செவ்வாய்கிழமை, ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான வீதிகள் மற்றும் ரயில் பாதையை மருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்ட பாய்ந்தனர் பின்னர் திடீரென துப்பாக்கி பிரயோகத்தையும் மேற்கொண்டனர்.
ரம்புக்கனையை அண்மித்த நாரணபெத்த என்ற கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமிந்த லக்ஷான் என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி ரம்புக்கனையில் நிலைமையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சி.டபிள்யூ.சி. தர்மரத்ன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன ஆகியோர் அறிவுறுத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.