அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கை வாரத்தில் நான்கு நாட்களாக குறைக்கப்படவுள்ளது.

இந்த யோசனை அடங்கிய பிரேரணை அமைச்சரவையின் அனுமதிக்கு இந்த வாரம் சமர்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நாளாக வெள்ளிக்கிழமையை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை நேற்று தெரிவித்தார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap