நாட்டின் நிலைமை குறித்து அறிக்கைகளை வெளியிடுவதற்குப் பதிலாக நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டின் தலைவர்கள் செய்தி வழங்குபவர்களைப் போன்று செயற்படுவதாக குற்றம் சாட்டினார்.

யார் வேண்டும் ஏறினாலும் பேசலாம் ஆனால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க இந்த அரசாங்கத்தினால் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் எரிபொருள், உணவு மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகளை எதிர்கொண்ட போதிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள்இந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதில்லை என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

இதேவேளை மருந்து மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு உள்ள பணம் தற்போது வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்த பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.

இவ்வாறான தீர்மானங்களை எடுத்த பின்னர் பொறுமையாக இருக்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், மக்கள் புதிய அரசாங்கத்தை கோரும் வேளையில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு அரசாங்கம் தயாராகி வருவது முட்டாள்தனமானது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap