திருகோணமலை கடற்படை முகாமிற்கு அருகில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாக சந்தேகம் தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வி.வி.ஐ.பிகளுடன் இன்று கொழும்பில் இருந்து சில ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றதாகவும் அதில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சென்றவர்கள் அனைவரும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அங்கிருக்கும் ராஜபக்ஷர்களை வெளியே அனுப்புமாறு கோரி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு வெளியே போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.

தற்போது பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று பதற்றமான சூழல் நிலவிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap