தற்போதுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு பணம் அச்சிடுவது தீர்வாகாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை வழங்குவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரச்சினைகளுக்கு பணத்தை அச்சிடுவது தீர்வாகாது என்றும், நிலையான பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அந்த கொள்கைகள் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவற்றின் வெற்றி 200 ஆடைத் தொழிற்சாலை வேலைத்திட்டம் போன்றவை மூலம் நிரூபணமானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மோசமான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக தொழிலதிபர்கள் வெளியேறினால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap