ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிப்பதற்கு எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முயற்சிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யோசனை முன்வைத்தார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்த பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆதரித்தார்.
அவைத்தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், பிரேரணையை நிறுத்துவதற்கு வாக்கெடுப்பு நடத்துமாறு கோரினார்.
இந்நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிள்ளையான், வியாழேந்திரன், டக்ளஸ் ஆகியோர் எதிராக வாக்களித்தனர்.


