புதிய அரசாங்கத்திற்கு பங்களிப்பை வழங்குங்கள் – சஜித்திற்கு பகிரங்க அழைப்பு
1 min read
புதிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்பை கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் தம்முடன் இணைந்து பணியாற்றுமாறும் அவர் கடிதத்தின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பிரதாய அரசியலில் இருந்து விலகுவோம் என்றும் தம்மோடு இணைந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க முன்வாருங்கள் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அமைச்சுப்பதவியை ஏற்கமாட்டோம் என சஜித் பிரேமதாச முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
