அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் நேற்று (03) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் இன்று (04) பதவி விலகுவார்கள் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இதனை உறுதிப்படுத்தியுள்ளது என கூறினார்.
ஆகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தீர்மானம் எட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.