இடைக்கால அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விரைவில் பதவி விலகலாம் என கம்யூனிஸ்ட் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க நேற்று (28) தெரிவித்தார்.
41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த யோசனைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இடைக்கால அரசாங்கம் அமைப்பது குறித்து கலந்துரையாட இன்று காலை நடைபெறவுள்ள கூட்டத்திற்கு 14 கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதியின் பதவி விலகலைக் கோருவது நடைமுறைச் சாத்தியமற்றது என வீரசுமண வீரசிங்க தெரிவித்தார்.
எனினும், தான் பிரதமர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பல தடவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.