இன்று இரவு முதல் புதிய சிறப்புப் பொருள்கள் வரி விதிப்பின் கீழ் அனைத்து இறக்குமதிகளின் விலைகளும் 15 முதல் 200 சதவீதம் வரை உயரும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான டயர்கள் மீதான வரி 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
காற்றுச்சீரமைப்பி (A/C), சலவை இயந்திரங்கள், ரைஸ் குக்கர், மைக்ரோவேவ், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் அலைபேசிகள் மீதான வரி 100 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
மின்சாதனங்கள் 15 சதவீதம் அதிகரித்துள்ள அதேவேளை சொக்லேட்களின் விலைகள் 200 சதவீதத்தினால் உயர்வடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் தயிர், பட்டர் மற்றும் பால் பொருள்கள் மீதான சிறப்பு பொருள்கள் ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
Prices of all imports go up by 15 to 200% under a new special commodity levy from tonight