வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் அழைப்பு !!
1 min read
அதிகாரப்பகிர்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி குறித்து பேசுவதற்கு வாருங்கள் வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த பேச்சுவார்த்தையானது, எதிர்வரும் 11ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு 13ஆம் திகதி சனிக்கிழமை வரையில் தொடர்ச்சியாக மூன்று தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், குறித்த பேச்சுவார்த்தையில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் மக்கள் கூட்டணி ஆகியன பங்கேற்பதை உறுதி செய்துள்ளன.
இந்த சந்திப்பில் நில அபகரிப்புக்கள், பௌத்த, சிங்கள மயமாக்கல், காணாமல் ஆகப்பட்டோர் விவகாரம் மற்றும் அரசியல் கைதிகள் மற்றும் அரசியல் தீர்வு பற்றியும் வலியுறுத்துவோம் என சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் முகங்கொடுத்து வரும் உடனடி மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்ட உள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வர குறிப்பிட்டார்.
இதேநேரம் இந்தப் பேச்சுவார்த்தைக்கு வடக்கு தமிழ் பிரதிநிதிகளை மட்டும் அழைத்துள்ளமையால், கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் தமது அதிருப்பதியை வெளியிட்டுள்ளனர்.