நாடு முழுவதுமாக முடக்க அல்லது ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், அடுத்த வாரம் அதிக எரிபொருள் நாட்டிற்கு வரும் என எதிர்பார்பதால் ஊரடங்கிற்கு அவசியம் இல்லை என கூறியுள்ளனர்.

சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முடக்க கட்டுப்பாடு அல்லது ஊரடங்குச் சட்டம் அவசியமா என்பது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை திங்கள்கிழமை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு பாடசாலை மற்றும் பொது சேவைகளுக்கான ஒன்லைன் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இதற்கான இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap