ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

முன்னதாக அறிவித்தபடி பதவி விலகுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று (11) தெரிவித்துள்ளது.

பதவியை இராஜினாமா செய்வதாக முன்னதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடந்த சனிக்கிழமை (9) ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

அதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் 13ஆம் திகதி பதவி விலகுவதாக ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap