பிரதமரைபதவி விலகுமாறு ஜனாதிபதி கோரிக்கை: திங்கள் விசேட அறிவிப்பை வெளியிடுகின்றார் மஹிந்த !
1 min read
புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் பதவியை இராஜினாமா செய்வது குறித்து பரிசீலிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த கோரிக்கையை ஜனாதிபதி விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது
இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே பதவி விலகுவதாக சமூக ஊடகங்களில் பல தடவைகள் செய்த்திகள் வெளியாகியபோதும் பிரதமர் அலுவலகம் மறுத்திருந்தது.
இருப்பினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அதற்கு இணக்கம் தெரிவிப்பேன் என்றும் முன்னதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.