ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இலங்கையில் இல்லாத காரணத்தினால் ஜனாதிபதியின் அலுவலகத்தின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயற்பாடுகளை நடைமுறைப் படுத்துவதற்கும், நிறைவேற்றுவதற்கும் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.