நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் பங்காற்றலுடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இன்று (29) தம்மைச் சந்தித்த சுயஈன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிலிருந்து 5 பேரை இடைக்கால அரசாங்கத்தில் நியமிக்கவும் அவர் தீர்மானித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுயாதீன அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்க செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தேசிய அரசாங்கத்தை தயாரிப்பதற்கான முதல் படியாக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய சபையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுவான நிலைப்பாட்டை எட்டினால், அவ்வாறான பிரேரணைக்கு தாம் உடன்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.