பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தேன் – பொன்சேகா
1 min read
பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள தான் தயாராக இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அதற்காக தான் முன்வைத்த நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எதிர்காலத்தில் எந்தவொரு அமைச்சையும் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.