நாளை வியாழக்கிழமை 3 மணிநேரமும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

அதற்கமைய, A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

மேலும் கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியினுள் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap