நாட்டில் மழை பெய்யாத பட்சத்தில் நாளாந்தம் ஐந்து மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சமனலவெவ மற்றும் லக்ஷபான நீர்த்தேக்கங்களின் ஊடாக நீர் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாக அதன் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்தார்.
மழை பெய்யாதது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஹைட்ரோ உற்பத்தியை உறுதி செய்ய முடியாவிட்டால் ஐந்து மணி நேர மின்வெட்டு விதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.