ஹொருகோகமவில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பிரயோகித்துள்ளனர்.
நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு இடையூறாக இருக்கும் காரணத்தினால் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் இந்த முயற்சியை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் பல்கலைக்கழகங்க மாணவர் சம்மேளனத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலையும் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை தாக்குதலை பொலிஸார் நடத்தியபோதும் அவர்கள் மீண்டும் போராட்ட இடத்தை வந்தடைந்து தொடர்ந்தும் போராடிவந்தனர்.
நாட்டில் தற்போது நிலவும் தேசிய மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.