பொது இடத்தில் ஒன்றுகூடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் மற்றும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு மக்கள் ஒன்றுகூடுவது சட்டத்திற்கு முரணானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஒருமாத காலமாக காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்குள் இருந்து ஒலிபெருக்கியை கட்டி பொலிஸாரினால் இந்த அறிவித்தல் போராட்டக்கார்களுக்கு விடுக்கப்பட்டது.