நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்ட பேரணியின் மீதே இவ்வாறு கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கோரி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து இவர்கள் பேரணியாக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

