இன்று இரவு 9.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்

கொழும்பு மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் இன்று இரவு 9.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்ப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் 7 பிரதேசங்களில் இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்.

அதன்படி நீர்கொழும்பு – களனி – கல்கிசை – நுகேகொட – கொழும்பு வடக்கு – கொழும்பு தெற்கு – கொழும்பு மத்திய பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.

இந்த காலகட்டத்தில் எவரும் வேட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கப்படாது என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.