இலங்கையில் எரிபொருள் நிலைமை அடுத்த சில வாரங்களில் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று எச்சரித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் எரிபொருள் நிலைமை மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து ஆய்வு செய்ததாகவும் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு அறிக்கை வெளியிட உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
ஏனைய நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனும் (IMF) பேச்சுக்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் இந்தியா ஏற்கனவே உதவி வழங்க முன்வந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
இருப்பினும் நிலைமை சீரடைய சுமார் 2-3 மாதங்கள் ஆகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.