ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறாமல் தமது பதவிகளை தொடர அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை கூறினார்.
எனினும், அமைச்சர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.