நிதி அமைச்சராகின்றார் ரணில் ?
1 min read
நிதி அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (25) காலை பதவியேற்றுக்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
20 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ள அதேவேளை அந்த அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கழும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே பதில் நிதி அமைச்சராக செயற்படுகின்றார் என நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.