பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய ஜனாதிபதி கோரவில்லை – மஹிந்த
1 min read
பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுக்கவும் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் பதவியை இராஜினாமா செய்வது குறித்து பரிசீலிக்க பிரதமரிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதிசெய்துள்ளார்.