இலங்கையில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் குழுவொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்துரையாடுவதற்காக வஜிர அபேவர்தன மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை உரத் தட்டுப்பாடு தொடர்பான பிரச்சினைகளை ஆராய அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை எரிபொருள் விநியோக தட்டுப்பாடு மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளுடன் தேவையான கலந்துரையாடல்களை நடத்தி, பிரச்சினைகளைக் கண்டறிவதோடு, பிரதமருக்கு அறிக்கையொன்றை கையளிக்கவுள்ளனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap