நாட்டில் தற்போது 90,000 மெற்றிக் தொன் பெற்றோல் இருப்பு உள்ளதாகவும், அவை 20 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பொதுமக்கள் பெட்ரோல் வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், டீசல் கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளதால், இந்த நாட்களில் டீசல் விநியோகம் மிகவும் குறைவாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

40,000 மெற்றிக் தொன் டீசல் கப்பல் ஒன்று 28 அல்லது 29 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதுவரை, தற்போதுள்ள இருப்புக்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதியளவு பெட்ரோல் இருந்தாலும், டீசலுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap