பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் 21 ஆவது திருத்தம் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அரசாங்கத்தில் சார்பற்ற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதேவேளை, அமைச்சுப் பதவியை பொறுப்பேற்ற கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா ஊடகங்களுக்கு நேற்று தெரிவித்தார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap