புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கை நாடாளுமன்றில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் பக்கத்தில் முன்வரிசை ஆசனம் (ஏழாவது ஆசனம்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அதே பக்கத்தில் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட உள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதியாக இருப்பதால் அவருக்கு முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்க்கட்சியில் முன் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap