சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தை எதிர்வரும் 17 செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைத்துள்ளார்.
அத்தோடு பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை தாக்குதல் குறித்து நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டிருந்த நிலையில் பொலிஸமா அதிபருக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்திற்கு மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து உடன் அறிவிக்குமாறு கோரி எதிர்க்கட்சியினர் சபாநாயகர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான பொலிஸாரின் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் குறித்தும் எதிர்க்கட்சியினர் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.