2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் தாக்குதலுக்கு நீதி கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுப்பு உடை அணிந்து சபைக்கு வருகை தந்திருந்தனர்.
இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் குறித்த தகவல்களை மறைக்க வேண்டாம் என்றும் புதிய விசாரணையைத் தொடங்குமாறும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.
மேலும் தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்ட அனைத்து ஆணைக்குழுக்கள் அறிக்கைகளையும் நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.