எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி: பேருந்து கட்டணங்களும் அதிரடியாக அதிகரிப்பு!
1 min read
எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து போக்குவரத்து கட்டணத்தில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (24) நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு இன்று கடிதம் எழுதவுள்ளதாக அதன் தலைவர் அறிவித்துள்ளார்.
அத்தோடு கட்டணத்தை 25-30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.
புதிய எரிபொருள் விலை
