கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் இரத்தினபுரியை சேர்ந்தவர் என்றும் காயமடைந்தனர் மாத்தறையை சேர்ந்தவர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஆறு மாவட்டங்களில் சுமார் 15,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் குறைந்தது 136 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 61 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
மோசமான காலநிலை காரணமாக கம்பஹா மாவட்டமே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.