முறையான பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும் வரை இலங்கைக்கு புதிய நிதி சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என உலக வங்கி எச்சரித்துள்ளது.

முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட உதவித் தொகையை அவசர தேவைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக உலக வங்கி அறிவித்திருந்தது.

இந்த பணத்தை அத்தியாவசிய மருந்துகள் கொள்வனவிற்கும், ஏழைகளுக்கு நிதி உதவி உட்பட இதர தேவைகளுக்கு பயன்படுத்துமாறு அரசாங்கத்தை உலக வங்கி அறிவுறுத்தியது.

இந்நிலையில் இலங்கைக்கு புதிய கடன் வசதியை வழங்குவதற்கான இறுதி உடன்படிக்கையை மேற்கோள் காட்டி ஊடகங்களில் வெளியான செய்திகளை உலக வங்கி மறுத்துள்ளது.

இருப்பினும் இலங்கை மக்களின் அவல நிலை குறித்து கரிசனை வெளியிட்ட உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap