வியாழன் (26) மற்றும் வெள்ளிக்கிழமை (27) ஆகிய இரு தினங்களில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

7,500 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்ட இரண்டு எரிவாயுக் கப்பல்களில் ஒன்று வெள்ளிக்கிழமை (27) வரும் என்றும் மற்றைய கப்பல் ஞாயிற்றுக்கிழமை (29) நாட்டை வந்தடையும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த இரண்டு கப்பல்களுக்கும் பணம் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், இறக்கும் பணிகள் தொடங்கிய உடனேயே சிலிண்டர்கள் விநியோகம் இடம்பெறும் என்றும் கூறியுள்ளது.

அத்தோடு முறையற்ற முறையில் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொண்டு அதிக விலைக்கு எரிவாயுவை வாங்கவோ அல்லது விற்கவோ வேண்டாம் என்றும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap