பொதுமக்கள் வீதிகளை மறிக்கும் அல்லது வன்முறையில் ஈடுபடும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பெட்ரோலிய ஏற்றுமதியில் 92 மற்றும் 95 ஒக்டேன் ஆகிய இரண்டும் உள்ளதால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும், அவை வரும் வாரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கோ அல்லது தனிநபர்களுக்கோ வரிசையில் நிற்கும் மக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தினால் முழு விநியோகமும் சீர்குலைந்துவிடும் என்று அமைச்சர் எச்சரித்தார்.
எனவே இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகும் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதைத் தவிர்ப்பதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஜே.வி.பி.யின் உறுப்பினரான வெலிகம பிரதேசத்தின் மாகாண சபை உறுப்பினர் உட்பட சிலர் வெலிகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வன்முறையை தூண்டியதாகவும் அமைச்சர் சாட்டினார்.