அனைத்து இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல் களஞ்சியசாலைகளும் இன்று (15) மூடப்படுவதால் எரிபொருள் விநியோகம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகங்கள் விநியோகஸ்தர்களுக்கு இன்று அறிவித்துள்ளன.
இதேவேளை நாளை (16) பொது விடுமுறை நாளாக இருந்தாலும் விநியோகம் வழமை போன்று இயங்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.