அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என தெரிவித்து அறிக்கை ஒன்றை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை தவிர ஏனைய அனைத்து அமைச்சசுக்களினதும் ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படவுள்ள நிவாரணம் அடங்கிய வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap