போலீசாரால் தேடப்பட்டு வரும் சுவாமி நித்தியானந்தா சமீப நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருந்தார்.

தனது உடல்நிலை சரியில்லாத தகவல் வெளியான நாளிலிருந்து நிறைய பணம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தயவு செய்து பணம் அனுப்பவதை நிறுத்தி விடுங்கள்.

பணத்திற்கு பதிலாக அருணகிரி யோகீஸ்வரர் படத்திற்கு முன் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும், விளக்கு ஏற்றும் படத்தை செல்பி எடுத்து பதிவிடுமாறும் பக்தர்களை வலியுறுத்தியுள்ளார் நித்தியானந்தா.

இந்த பதிவை பார்த்த அவரது பெண் பக்தர்கள் ஏராளமானோர் விளக்கு ஏற்றி அதன் செல்பியையும் எடுத்து இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap