40,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 37,000 மெற்றிக் தொன் பெற்றோல் அடங்கிய கொண்ட கப்பல் இலங்கைக்கு வந்துள்ள போதிலும், எரிபொருளை விடுவிப்பதற்கு டொலர்கள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 10 நாட்களுக்கு போதுமான அளவு ஒக்டேன் 92 மற்றும் 95 பெட்ரோல் இருப்பு தற்போது உள்ளதாக என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.