சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்ற 67 பேர் திருகோணமலையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாம்பல்தீவு மற்றும் திருகோணமலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 30 முதல் 40 வயதுடைய 12 ஆண்களுடன் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்து இரண்டு முச்சக்கர வண்டிகள், ஒரு கெப் மற்றும் ஒரு வேன் கைப்பற்றப்பட்டுள்ளது

இதனை அடுத்து சந்தேகத்திற்கிடமான முறையில் பல நாட்களாக இருந்த மீன்பிடி இழுவை படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் 45 ஆண்கள், 07 பெண்கள் மற்றும் 03 குழந்தைகள் உட்பட 03 முதல் 53 வயதுக்குட்பட்ட 55 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap