ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று வர்த்தக அமைச்சராக பதவியேற்ற நளின் பெர்னாண்டோ மோசடி விவகாரத்தில் முன்னதாக இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார்.

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நளின் பெர்னாண்டோ அன்றையதினம் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை இதற்கு முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

விளையாட்டு உபகரணங்களை வாங்குவதற்காக 39 மில்லியன் ரூபாய் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap