தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாக இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.
நிலையான அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இடைக்கால அரசாங்கம் ஒன்றினை அமைக்க இடமளிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுத்ததாக கூறியுள்ளார்.
இருப்பினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதனை ஏற்றுக்கொள்ளவில்லையென ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.