ஆயிஷா படுகொலை: சந்தேக நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
1 min read
பண்டாரகம அட்டுலுகம சிறுமி ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரை இன்று புதன்கிழமை பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.