முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நவாலியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு அருகில் உள்ள நினைவுத்தூபியில் இன்று காலை 9.30 மணியளவில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் இலங்கை விமானப் படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் – நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் 1995 ஆம் ஆண்டு ஆடி மாதம் 9 ஆம் திகதி விமான தாக்குதலில் 147 பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap